ராணுவ வீரர்களுக்கான மருந்துகள் கண்டுபிடிப்பு?

போர் மற்றும் தீவிரவாத தாக்குதலில் படுகாயம் அடையும் ராணுவ வீரர்களுக்கான உயிர்காக்கும் மருந்துகளை இந்திய ராணுவ மருந்துகள் ஆய்வு மையம் தயாரித்துள்ளது. காஷ்மீரின் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்.
இதுபோன்ற தாக்குதலில் படுகாயம் அடையும் வீரர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பு, உயிர் பிழைத்திருக்க கூடிய ’’கோல்டன் ஹவர்” எனப்படும் பொன்னான நேரத்தை நீட்டிப்பது அவசியமாகும்.

இந்நிலையில், இதற்கான அரிய மருந்துகளை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் மருந்துகள் ஆய்வக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தாக்குதலில் படுகாயம் அடையும்போது உடலில் இருந்து அதிகளவில் ரத்தம் வெளியேறுவதை தடுக்கும் வகையில் இந்த உயிர்காக்கும் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.புல்வாமா தாக்குதலின்போது இந்த மருந்துகள் பயன்படுத்தப்பட்டிருந்தால் உயிரிழப்புகள் குறைந்திருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *