ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை கைபற்றியது. பாஜக அரசு தேர்தலில் பெரும் தோல்வியை எதிர் நோக்கியுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு 163 தொகுதியில் வென்ற பாஜக. இப்பொழுது 76 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
காங்கிரஸ் கடந்த முறை 2013ல் 21 தொகுதிகள் மட்டுமே பெற்றது. ஆனால் தற்பொழுது 108 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
ராஜஸ்தானில் மொத்தம் 2,247 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். மொத்தம் 200 தொகுதியாகும். இதில் பகுஜன் சமஜ் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் திடிர் மரணம் அடைத்தால் அந்த ஒரு தொகுதியில் மட்டும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது