பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தின் 17 ஆம் ஆண்டு நிறைவு இன்று விழா கடைபிடிக்கப்பட்டது. இதையடுத்து நாடாளுமன்ற தலைவர்கள் அஞ்சலி நிகழ்ச்சி நடத்தினர்.
5 மாநில தேர்தல் முடிவுகள் எதிரொலியாக சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சியில் இருந்தது. தற்பொழுது அதில் மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. நாடாளுமன்ற தாக்குதல் சம்பவத்தின் நினைவு தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பாஜக மூத்த தலைவர் அத்வானி மத்திய அமைச்சர்கள், மாநிலங்களவை தலைவர்கள்,காங்கிரஸ்யின் மூத்த தலைவர் சோனியா காந்தி, கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பார்த்து பேசுவதை பிரதமர் மோடி தவிர்த்துவிட்டார். சத்தீஷ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க இருக்கிறது. இதனால் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்ற பின் அந்த கட்சியினரால் ராகுல் காந்தி மிகவும் பாராட்டப்பட்டு வருகிறார்.