- அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தற்பொழுது தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் பல்வேறு பூஜைகளில் பங்கேற்று வருகிறார்.
ராஜஸ்தானில் புஸ்கர் என்ற இடத்தில் பிரம்மா கோவிலுக்குச் சென்றார் அங்குப் பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அங்கு இருந்த பூஜாரி பூஜை ஏற்பாடுகளைக் கவனித்து வந்தார்.
அப்போழுது குலம் கோத்திரம்பற்றிய கேள்விகளுக்கு விடையளித்தார். கோத்திரம் தத்தாதிரேய கோத்திரன் கபூல் பிராமணன் எனவும் தெரிவித்தார். காஷ்மீர் பண்பிட்களைக் கபூல் என அழைக்கப்படுகிறார்கள்.
இதற்க்கு முன்பு பலமுறை அவரது மதம், கோத்திரம் சம்பந்தமாகப் பாஜக கேள்வி எழுப்பியது அதற்க்கு பதில் அளித்து உள்ளார் என்றே அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.