இந்தியன் பிரிமியர் லீக்கில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 218 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆட்டத்தை வெளிப்படுத்திய உத்தப்பா 50 பந்துகளில் 67 ரன்களும், நிதிஷ் ராணா 34 பந்துகளில் 63 ரன்களும், ரஸ்சல் 17 பந்துகளில் 48 ரன்களும் எடுத்தனர்.
219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 190 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டேவிட் மில்லர் 59 ரன்களும், மயங்க் அகர்வால் 58 ரன்களும் எடுத்தனர்.
இதன் மூலம் 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.48 ரன்கள் உடன் இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றிய ரஸ்சல் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.