இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சமீபத்தில் அளித்த பேட்டியில் வெளிநாட்டு தொடர்களில் தற்போது அணியில் உள்ள வீரர்களில் குல்தீப் யாதவ் தான் சிறந்த டெஸ்ட் சுழற்பந்து வீச்சாளர் என கருத்து தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் தேர்வு குழுமத் தலைவர் எம்எஸ்கே அளித்துள்ள பேட்டியில் அஸ்வின் தான் இந்திய அணியின் பிரதான டெஸ்ட் சுழற்பந்து வீச்சாளர். அதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை. நாம் அஸ்வினை பற்றி பேசும்போது ஒரு சாதனையாளாரை பற்றி பேசுகிறோம் என்பதை நினைவில் வைத்து பேச வேண்டும் என ரவிசாஸ்திரிக்கு எதிரான கருத்தை தெரிவித்து உள்ளார்.