ரஞ்சி டிராபியில் குஜராத் அணிக்கு எதிரான காலிறுதி போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கேரள அணி அரை இறுதியில் நுழைந்து உள்ளது.
கேரளாவில் நடை பெற்ற இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் கேரள அணி 185 ரன்கள் எடுத்தது. அடுத்து முதல் இன்னிங்ஸ் ஆடிய குஜராத் அணி 162 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் கேப்டன் பார்த்திவ் படேல் அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார்.
இரண்டாம் இன்னிங்ஸில் கேரள அணி 171 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் ஜோசப் 56 ரன்கலும், சக்சேனா 44 ரன்கலும் எடுத்தனர். அடுத்து 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 81 ரன்களில் ஆட்டம் இழந்தது. கேரள அணியின் சந்தீப் வாரியர், பசில் தாம்பி இந்தப் போட்டியில் தலா 8 விக்கெட்கள் கைபற்றி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தனர்.