ரஞ்சி சாம்பியன் ஆனது விதர்பா அணி

ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில் சௌராஷ்டிரா அணியை 78 ரன்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையை கைப்பற்றியது விதர்பா அணி. முதல் இன்னிங்சில் விதர்பா அணி 312 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் அக்ஷ்ய் கர்நிவார் அதிகபட்சமாக 73 ரன்கள் எடுத்தார். அடுத்து முதல் இன்னிங்ஸ் ஆடிய சௌராஷ்டிரா அணி 307 ரன்கள் எடுத்தது.

சிறப்பான பேட்டிங் ஐ வெளிப்படுத்திய சிநெள் படேல் 102 ரன்கள் அடித்தார். விதர்பா அணி தன் இரண்டாம் இன்னிங்ஸில் 200 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சௌராஷ்டிரா அணி 127 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் 78 ரன்கள் வித்தியாசத்தில் விதர்பா அணி வெற்றி பெற்றது.

சிறப்பாக பந்து வீசிய விதர்பா அணியின் வீரர் அடிட்யா சர்வேட் 6 விக்கெட்களை கைபற்றி அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் 6 வது முறையாக கோப்பையை வென்றது விதர்பா அணி. இந்த போட்டியில் மொத்தம் 11 விக்கெட்களை கைப்பற்றிய சர்வேட் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *