ரஜினிக்கு எதிரான வழக்கை ரத்துச் செய்து ஐகோர்ட் உத்தரவு.

கஸ்தூரிராஜாவுக்குப் பணம் கொடுத்த வழக்கில் ரஜினிக்கு எதிராக அவதூறை ரத்துச் செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவு.

சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த பைனான்சியர் முகன்சந்த் போத்ரா திரைப்பட இயக்குனருமான நடிகர் தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜாவுக்கு எதிராகச் செக் மோசடி செய்துள்ளது தொடர்பான ஒரு வழக்குச் சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது அந்தக் கடன் வழக்கில் ரஜினிகாந்த் உத்திரவாதம் கொடுத்திருந்தார்.

அதனால் தான் நான் பணம் கொடுத்தேன் என்று கூறினார் பைனான்சியர். கொடுத்த பணம் பறிக்க முயற்சிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் மீது அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்தக் குற்றச்சாட்டால் தன்னுடைய நற் பெயர் கெட்டுவிடும் என்று கூறி நடிகர் ரஜினிகாந்த் வழக்கு ஒன்றை பைனான்சியர் மீது தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு விசாரணைக்குத் தொடர்ந்து ஆஜராகவில்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த நிலையில் ஏற்கனவே ரஜினிகாந்த் கொடுத்த மனு வழக்கை ரத்துச் செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்தார் அந்த நிலையில் ஏற்கனவே நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் உரிமையில் வழக்கை நிராகரிக்கக் கூறிய கருத்தின் அடிப்படையில் இந்த வழக்கு தொடர முடியாது என்று வழக்கை ஐகோர்ட் விசாரணைக்குத் தடை விதித்திருந்தது. இந்த வழக்கின் இறுதி உத்தரவை இன்று வெளியாகியிருக்கிறது அதில் ரஜினிக்கு எதிராக நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கை நீதிபதி ரத்துச் செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *