
யானைகளுக்கு 48 நாட்கள் புத்துணர்வு முகாம்
யானைகள் முகாம் இன்று முதல் தொடங்கி 48 நாட்களுக்கு நடக்க இருக்கிறது. இதில் 33 யானைகள் பங்கேற்றுள்ளன யானைகளுக்காக பழங்கள், காய்கறிகள், கரும்புகள் போன்ற உணவுகள் அளிக்கப்படுகின்றன. யானைகளுக்கான சிறப்பு மருத்துவ வசதியும் யானைகள் இந்த 48 நாட்களில் புத்துணர்ச்சியாக இருக்கவும் அவைகளை உற்சாகப்படுத்தும் வகையில் இந்த முகாம் நடைபெற்று வருகிறது.
இதில் கும்பகோணதில் உள்ள ஆதிகும்பேஸ்வரர் கோயிலைச் சார்ந்த மங்களாம்பிகை யானை பங்கேற்கவில்லை. அதற்குக் காரணம் மங்களம் உடல்நிலை சிறிது நாட்களாக சரியில்லாததால் முகாமிற்கு சென்றால் மற்ற யானைகளுக்கும் பரவி விடும் என்பதற்காக அழைத்துச் செல்லவில்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மங்களம் உடல்நிலையை பாதுகாக்க கோயில் நிர்வாகம் மருத்துவ வசதியும் செய்து வருகிறது. இந்த முகாம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட அனைத்து யானைகளும் உற்சாகமாக இருக்கின்றன.