மொத்தம் எத்தனை வேட்புமனுக்கள்?

தமிழக மாநிலத்தில் கடந்த 19 ஆம் தேதி துவங்கிய வேட்பு மனு தாக்கல் நேற்று மாலை 3 மணியுடன் முடிவடைந்தது.39 மக்களவை தொகுதிகளில் மொத்தம் 1569 பேர் மனு தாக்கல் செய்து உள்ளனர். இதில் 171 பெண்களும் 2 மூன்றாம் பாலினத்தவரும் அடங்குவர். இடைத்தேர்தல் நடைபெறும் 18 தொகுதிகளில் 508 பேர் மனு தாக்கல் செய்து உள்ளனர். இன்று வேட்பு மனு பரிசீலனை நடைபெறுகிறது. வரும் 29 ஆம் தேதி வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளாகும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *