உலகில் முன்னணி சாப்ட்வேர் மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்டின் துணை நிறுவனர். பவுல் ஜி ஆலன் புற்று நோயால் காலமானார்.
பவுல் ஜி ஆலன் ஜூன் 21, 1953 அமெரிக்காவில் பிறந்தார். வாஷிங்டன் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த இவர், பிறகு படிப்பை இடையில் விட்டு விட்டார்.
அமெரிக்காவின் பொருளாதார உந்துசக்தியாக விளங்கினார். இவர் பல்வேறு தொழில்களில் சிறப்பாக செயல்பட்டு வந்தார். உலகின் 46 ஆவது கோடீஸ்வரர் ஆவார். இவரது சொத்து மதிப்பு ஏறக்குறைய 20.3 பில்லியன் டாலராகும். இவர் பல தொழில்களில் ஈடுபட்டு வந்தார் அவற்றில் முக்கியமானது மீடியா கம்பெனிகள், விஞ்ஞான ஆராய்ச்சி, கட்டுமானத்துறை, பங்கு வர்த்தகம் மட்டுமில்லாமல் கால்பந்து, பேஸ்கட் பால் போன்றவற்றிலும் முதலீடு செய்து வந்தார். பவுல் ஜி ஆலன், ஆலன் இன்ஸ்டியூட்ப் மூளை ஆராய்ச்சி, இன்ஸ்டியூட்ப் ஆர்ட்டிபீஸ்யில் இண்டரிஜென்ஸ் போன்றவற்றையும் நிறுவினார். பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தார். இவரது இழப்பு உலகத்திற்க்கு ஈடுசெய்ய முடியாது.
பவுல் ஜி ஆலன் இந்த பெயரை கேட்டாலே பல தொழில் நுட்ப மேதைகளுக்கு சிம்ம சொப்பனம், பலருக்கு உற்சாகம், பலருக்கு உத்வேகம், பலருக்கு பொறாமை அப்படி என்ன செய்தார்.
உலகத் தொழில் மேதை,இவர் பில்கேட்ஸ்சின் குழந்தை கால நண்பர். இவரின் தொழில்நுட்பத் திறன் மிகவும் துல்லியமானது. இவரது இழப்பை பில்கேட்ஸ் எனது இதயம் நொறுங்கி விட்டது. எனது அன்பான மற்றும் பழைய காலத்து நண்பனை இழந்துவிட்டேன். என்று பில்கேட்ஸ் கண்கலங்கி உள்ளார்.
பவுல் ஜி ஆலன், பில்கேட்ஸ்க்கு சற்றும் அறிவுத் திறனில் சளைத்தவர் அல்ல. மைக்ரோசாப்ட் இவர் ஆற்றிய பணிகள் பல மைக்ரோசாப்டின் நினைவக மனிதன் என அழைக்கப்பட்டார்.
மைக்ரோசாப்டின் இவரது பணியை 1975ல் துவங்கப்பட்ட மைக்ரோசாப்ட் ஆரம்பத்தில் மைக்ரோ கம்ப்யூட்டர் என்றே அழைக்கப்பட்டது.பவுல் ஆலன் மைக்ரோசாப்ட் என மாற்றி அமைத்தார்.சிறு நிறுவனங்களுக்கு மென்பொருட்கள் பொருட்கள் தயார் செய்யப்பட்டது.அதன் பிறகு திரைகணினிகள் உற்பத்தி ஆரம்பித்த நேரம். அதுவே ஆகும்.
1982-ல் தான் அவர்களால் வியாபாரம் மற்றும் வாடிக்கையாளரை நோக்கி நகர முடிந்தது. அந்த ஏழு ஆண்டுகளில் பர்னசல் கம்ப்யூட்டர் மாறி புதிய அத்தியாயத்தை தொடங்க ஆரம்பிக்கும் நேரம்.
உட்பதிக்கப்பட்ட கணினிகளின் காலம் அது. பில்கேட்ஸ் & பவுல் ஜி ஆலன் கூட்டு முயற்சியால்.
1981-ல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தயார் செய்யப்பட்டது. அதன்பிறகு அவர்களது முயற்சிகளெல்லாம் வெற்றி பெற ஆரம்பித்தது. அதன்பிறகு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் டிஸ்க் ஆப்ரேட்டிங், எம்.எஸ்.டாஸ் என பல புரட்சி ஏற்பட்டது.
ஆலன் SAT Test-ல் 1600 பெற்றார். ஆதலால் அவர்க்கு State University இடம் கிடைத்தது. ஆனால் இரண்டு வருடத்தில் படிப்பை கைவிட்டார். Honeywell நிறுவனத்தில் புரோகிராம்மர் வேலை கிடைத்தது. அந்த சமயத்தில் Hardvard University-ல் பில்கேட்ஸ் பயின்றார்.பில்கேட்ஸ் கடுமையான பொருளாதார உத்திகளை கடைப்பிடித்தார். ஆனால் பவுல் ஜி ஆலன் மென்மையான உத்திகளை ஆரம்ப காலத்தில் கடைப்பிடித்தார்.
இவர் தனது வருமானத்தில் ஏறக்குறைய அமெரிக்க டாலரின் மதிப்பில் இரண்டு மில்லியன் டாலருக்கு சமூக சேவைக்காக செலவிட்டுள்ளார். சமூகத்திற்கு அவர் செலவிட்ட தொகை மிக அதிகம்.
தமிழ் நேரலை சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.