உலகம் முழுவதும் பெறும்பாலன மக்களால் அதிகம் பயன் படுத்தும் இயங்குதளமாக இருப்பது மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஆகும்.
அதில் பெரும்பாலனவர்கள் விரும்பி பயன்படுத்தியது “விண்டோஸ் xp” ஆகும்.சில ஆண்டு முன்பு விண்டோஸ் xp-க்கான ஆதரவை மைக்ரோசாப்ட் நிறுவனமானது நிறுத்தி கொண்டது. அதன் பின் பயனர்கள் அதிகம் பயன்படுத்தியது “விண்டோஸ் 7” இயங்குதளம் ஆகும். “விண்டோஸ் 7” உலக அளவில் 36.9 சதவீத வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.
அதிகம் பயன்படுத்தப்பட்ட இயங்குதளக்களில் “விண்டோஸ் xp” அடுத்ததாக “விண்டோஸ் 7” இருக்கிறது.
விண்டோஸ் 7 னை மைக்ரோசாப்ட் 2009-ம் ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி அறிமுகப்படுத்தியது. மைக்ரோசாப்ட் விண்டோஸ் 7 விற்பனையை 2016 உடன் நிறுத்திகொண்டது. செக்யூரிட்டி அப்டேட் மற்றும் பிற ஆதரவுகளை மட்டும் வழங்கி வந்தது.
இந்த நிலையில் மைக்ரோசாப்ட் ஆனது செக்யூரிட்டி அப்டேட் மற்றும் பிற ஆதரவுகள் விண்டோஸ் 7 -க்கு 2020 ஜனவரி 14 க்கு பிறகு வழக்கப்படமாட்டது எனவும் விண்டோஸ் 10-க்கு அப்டேட் செய்து கொள்ளலாம் என்று மைரோசாப்ட் தெரிவித்துள்ளது.
மற்ற இயங்குதளங்கள் பற்றி தெரித்து கொள்ள மைக்ரோசாப்ட் சப்போர்ட் இணையத்தளத்தில் தெரித்து கொள்ளலாம்.