நடிகர் அஜித் அடுத்ததாக பிங்க் திரைபடத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார். இதில் வித்யாபாலன் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.
முக்கிய கதாபாத்திரத்தில் ரங்கராஜ் பாண்டே நடிக்க உள்ளார்.ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆண்டரியா டாரியங்க், அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கும் இந்த படத்திற்க்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். வினோத் இந்த படத்தை இயக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. படத்தை மே 1 ஆம் தேதி அஜித் பிறந்த நாளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளதாக தெரியவருகிறது.