காவேரி மேலாண்மை கூட்டம் நேற்று தலைநகர் டெல்லியில் நடைபெற்றது.
தமிழகத்துக்கும், கர்நாடகவுக்கும் பொதுவாக அமைக்கப்பட்ட காவேரி மேலாண்மை கூட்டம் கமிஷன் தலைவர் மசூத் உசேன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழக, கர்நாடக பிரிதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.
கர்நாடகம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு ஆகிய மாநில உறுப்பினர்களின் பல்வேறு கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டது.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தலைவர் மசூத் உசேன்.
கூட்டம் சுமுகமாக நடைபெற்றதாகவும். அடுத்தக் கூட்டம் ஜனவரியில் நடைபெறும் எனத் தெரிவித்தார். கூட்டத்தில் நடைபெற்ற விவாதகளை வெளியிட முடியாது எனவும் தெரிவித்தார்.
மேகதாது அணைக்குக் கர்நாடக அனுமதி என்பது மத்திய நீர்வள ஆணையத்தின் அனுமதி மட்டுமே எனவும், காவேரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதி நிச்சயம் தேவை எனவும், அதற்கான அனுமதி இன்னும் வழங்கப்படவில்லையெனத் தெரிவித்தார்.