கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணைக்கட்டக் கர்நாடக அரசு மத்திய அரசிடம் விண்ணம்பித்து இருந்தது. அதற்குத் தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.
ஆனால் கர்நாடக அரசின் வரைவுதிட்டத்திற்குக் மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. இதன் மூலம் கர்நாடக அரசு தனது ஆயத்த பணிகளைச் செய்ய இயலும்.
இதுகுறித்துத் தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதுகுறித்து அரசியல் தலைவர்களின் கருத்து
ராமதாஸ்
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் வரைவுத் திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது கண்டிக்கத்தக்கது.உச்சநீதிமன்றம் மற்றும் நடுவர் மன்றத் தீர்ப்பை மீறிய செயல் ஆகும்.அணை கட்டுவதற்கான முதல்கட்ட ஆய்வு செய்வதற்கான ஒப்புதலை திரும்பப்பெற வேண்டும்!
தினகரன்
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முதற்கட்ட வரைவு அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையிலும், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள நிலையிலும் மத்திய சுற்றுச் சூழல் துறை அனுமதி அளித்திருப்பது மிகப்பெரிய அநீதியாகும்.