சென்னை மெரினா கடற்கரையைச் சுத்தப்படுத்தும் பணியை ஆய்வு செய்யப் போலீஸ் கமிஷனரிடம் சென்னை மாநகராட்சி ஆணையர் தினமும் நடைபயிற்சி செல்ல வேண்டுமென்று ஹைகோர்ட் அறிவுரை வழங்கியுள்ளது.
இதற்காகத் தூய்மைப்படுத்தும் எந்திரங்கள் பல புதிதாக வாங்கப்பட்டுள்ளன இதற்காக 250 பணியாளர்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மெரினாவில் கடை அமைக்க 1544 பேருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இதைப் படித்த நீதிபதிகள் வருகின்ற புத்தாண்டில் மக்கள் மெரினாவில் சுத்தமான புத்தாண்டு கொண்டாடும் விதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணி முறையாக நடைபெறுகிறதா என்பதைப் போலீஸ் கமிஷனர் சென்னை மாநகராட்சி ஆணையர் தினமும் காலையில் நடை பயிற்சி மேற்கொண்டு கவனிக்க வேண்டுமென்று அறிவுரை வழங்கினார். இந்தத் திட்டத்திற்குத் தமிழக அரசு எவ்வளவு தொகை வழங்கியுள்ளது என்ற விவரங்களை அதிகாரிகள் சீக்கிரம் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர் அதற்காக இந்த வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்குத் தள்ளி வைத்திருக்கிறார்கள்.