பயணிகளின் வருகையை அதிகரிக்க சென்னை மெட்ரோ ரயிலில் 30 நாள் பயணம் செய்யும் வகையில் ‘டூரிஸ்ட் கார்டு’ திட்டத்தை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், வருவாயை அதிகரிக்க ‘30 நாட்கள் டூரிஸ்ட் கார்டு’ என்ற புதிய திட்டத்தை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
டூரிஸ்ட் கார்டுக்கு ரூ.2,550 ஐ பயணிகள் கட்டணமாக செலுத்த வேண்டும். இதில் ரூ.50 திரும்ப பெறலாம். ரூ.2,500 திரும்பி அளிக்கப்படாது. 30 நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயிலில் டூரிஸ்ட் கார்டு திட்டம்
