மும்பை வைர வியாபாரி நீரவ் மோடி அவரது நெருங்கிய உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர் வங்கியில் ரூபாய் 13000 கோடி சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் மோசடி செய்தனர். இதை தொடர்ந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது வருகிறது.
நீரவ் மோடிக்கு சொந்தமான 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. இந்த மோசடி வெளியுலகத்திற்கு தெரிய வருவதற்கு முன்னரே வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டார் நீரவ் மோடி.
அவரது பாஸ்போர்ட்டை முடக்கியும். அவர் வெவ்வேறு பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்தி பல நாடுகளுக்கு சுற்றி வருகிறார். இதை தொடர்ந்து நீரவ் மோடிக்கு ரெட் கார்னர் நோட்டிஸ் விடப்பட்டுள்ளது.
பின் அவர்களது சொத்துக்கள் முழுவதையும் முடக்கி அவர்கள் இருவரையும் இந்தியாவிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.