மூன்று மாநில புதிய முதல்வர்கள் பதவியேற்பு விழா

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. அதற்கான பதவியேற்பு விழா மூன்று மாநிலங்களிலும் இன்று  நடக்க இருக்கிறது. வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் தலைமையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் நீண்ட ஆலோசனைக்கு பிறகு புதிய தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அந்த மூன்று மாநிலங்களிலும் இன்று முதல்வர்கள் பதவியேற்க உள்ளனர். மத்திய பிரதேச முதல்வராக அந்த மாநில மூத்த தலைவர் கமல்நாத் பெயர் முதல்வராக அறிவிக்கப்பட்டது. அதே போல ராஜஸ்தானில் அசோக் கெலாட், துணை முதல்வராக சச்சின் பைலட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

சட்டிஸ்கரில் பூபேஷ் பகேல் முதல்வராக  தேர்வு செய்யப்பட்டர் . மூன்று மாநிலங்களிளூம் நடக்கவுள்ள முதல்வர் பதவியேற்பு விழா  நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியும், திமுக கட்சி தலைவர் மு க ஸ்டாலின் அவர்களூம் கலந்து கொள்ள உள்ளார். அதற்கு தகுந்தார் போல் பதவியேற்பு நேரம் முடிவு செய்யப்பட்டுள்ளது. காலை 10 மணி அளவில் ராஜஸ்தானிலும், மதியம் 1.30 மணியளவில் மத்திய பிரதேசத்திலும், மாலை 4 மணியளவில் சட்டீஸ்கரிலும் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *