2019-ல் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதை ஒட்டி அனைத்து கட்சிகளும் தனது தேர்தல் பணிகளை ஆரம்பித்துள்ளன. அதன் ஒரு பகுதியாக அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒருவரை ஒருவர் சந்தித்து தங்களது பிரச்சார விதிகளையும் தேர்தல் பணிகளையும் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.
சில நாட்களுக்கு முன்பு “சந்திரபாபு நாயுடு” அவர்கள் திமுக தலைவர் “மு.க.ஸ்டாலின்” அவர்களே அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
அதன் பிறகு காங்கிரஸ் தமிழக மேலிடப் பொறுப்பாளர் ஆன “சஞ்சய்தத்” அவர்கள். திமுக தலைவர் “மு.க.ஸ்டாலின்” அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
இந்தச் சந்திப்பு நடந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் விரைவில் ராகுல் காந்தி மற்றும் மு.க.ஸ்டாலின் உடனான சந்திப்பு நடைபெறும் எனச் சூசகமாகத் தெரிவித்தார்.
அகில இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைவர் சீதாரம் யெச்சூரி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று சந்திக்கிறார்.
இச்சந்திப்பில் தேர்தல் கூட்டணிபற்றிய முக்கிய முடிவுகள்பற்றி ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இச்சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை எதிர்நோக்கியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தனது வேகத்தைக் காட்டவுள்ளன.
குறிப்பாகத் தமிழகத்தில் உள்ள திமுக கழகம் தனது தேர்தல் பொறுப்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. திமுக கழக தலைவராக மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பு ஏற்றதிலிருந்து கட்சி சீரமைப்பு மற்றும் தேர்தல் பணிகளில் அதிக கவனம் செலுத்துகிறார்.