இன்று திமுகத் தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அரிவலாயத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் சந்தித்துப் பேசினார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுகப் பொருளாலர் துரைமுருகன் தெரிவித்த கருத்துகள் அரசியலில் சற்றுச் சலசலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மாதிமுகத் தலைவர் வைகோவும் கூட்டணிகுறித்து ஸ்டாலின் தான் முடிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்து இருந்தார்.
பரபரப்பான இன்நிலையில் திருமா அவர்கள் ஸ்டாலின் அவர்களை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்துப் பேசினார்.
திமுகவுடன் உறவு வலுவாக உள்ளதாகவும். இதைச் சிலர் பிரிக்க நினைப்பதாகவும். சில கட்சிகள் கூட்டணியிலிருந்து பிரிக்க முயற்சிப்பதாகவும். அது நிறைவேறாது எனவும் தெரிவித்தார்.
கஜா புயலின் விளைவுகள்குறித்து விவாதித்தாகவும் தெரிவித்தார். டிசம்பரில் நடைபெற உள்ள விசிக மாநாட்டில் அனைத்துத் தோழமை கட்சிகளும் பங்கேற்பதாகவும் தெறிவித்தார்.
இச்சந்திப்பு மூலம் திமுகக் கூட்டணிபற்றிய சலசலப்பு குறைந்துள்ளது