மும்பை அரசு மருத்துவமனையில் தீ விபத்து

மும்பை அந்தேரி மரோல் பகுதியில் மத்திய அரசுக்குச் சொந்தமான காம்கார் என்ற தொழிலாளர் நல அரசு மருத்துவமனை இயங்கி வருகின்றது. இந்த மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு மருத்துவம் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் மருத்துவமனையின் நான்காவது மாடியில் திடீரெனத் தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் வேகமாகப் பரவிய தீ மருத்துவமனையைச் சுற்றிவளைத்தது. அதிக அளவில் கரும்புகையை வெளியேற்றிய தீ நோயாளிகளை அச்சுறுத்தியது. இதையடுத்து டாக்டர்கள், மருத்துவமனை, ஊழியர்கள் என அனைவரும்  வெளியேறினர்.

உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் அனைவரும் உயிரை காப்பாற்றிக் கொள்ள ஓடினர் நோய் காரணமாக எழுந்திருக்கவும் நடக்கவும் முடியாமல் படுக்கையில் இருந்த நோயாளிகள் தங்கள் உயிரை காப்பாற்ற கூச்சலிட்டனர். அதிகப் புகையின் காரணமாகப் பல நோயாளிகள் மூச்சுத்திணறலால் பாதிபடைந்தனர்.

இதனால் தப்பிக்க வழி தெரியாமல் அவர்கள் தவித்தனர் தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ கொழுந்து விட்டு எரிந்ததால் தீயணைப்பு வீரர்களுக்குப் பெரும் சவாலாக இருந்தது. 12 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க முயற்சித்தனர். தீயணைப்பு படையினர் மருத்துவமனையிலுள்ள ஏராளமான நோயாளிகளை மீட்டனர்.

இவர்களில் பலர் தீ காயமடைந்தனர் மற்றவர்கள் புகையில் சிக்கி மூச்சுத் திணறல் மற்றும் மயக்கம் அடைந்தனர். உடனடியாக அந்த நோயாளிகள் அனைவரையும் வேறு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்று சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 6 நோயாளிகள் பலியானது தெரியவந்தது. இரண்டு வயது குழந்தையும் அதில் இறந்தது.

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தற்பொது தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகறித்துள்ளது. தீ விபத்தில் பலியான நோயாளிகள் குடும்பத்திற்குத் தலா 10 லட்சம் படுகாயமடைந்த நோயாளிகளுக்கு ரூபாய் இரண்டு லட்சமும் லேசான காயம் அடைந்தவர்களுக்குத் தலா ரூபாய் ஒரு லட்சம் வழங்கும்படும் என மராட்டிய மாநில அரசு தெரிவித்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *