கிரிக்கெட் விமர்சகர்,பொறியாளர் S.வீரசெல்வம்.
தமிழ்நேரலை
இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ராஜ்கோட்டில் நேற்று துவங்கியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோஹ்லி பேட்டிங் செய்வதாக அறிவித்தார். துவக்க வீரர்களாக ராகுல் மற்றும் அறிமுக வீரர் பிரித்வி ஷா களம் இறங்கினர். கேப்ரியலின் முதல் ஓவரின் கடைசி பந்தில் ராகுல் டக் அவுட் ஆகி வெளியேறினர். அடுத்ததாக களமிறங்கிய புஜாராவும் பிருதிவி ஷாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாத வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் பந்து வீச்சில் பவுண்டரிகளாக இருவரும் விரட்டினர். புஜாரா ஸ்டரைட் டிரைவில் சில அற்புதமான பவுண்டரிகளை அடித்தார்.16 பவுண்டரிகளுடன் 130 பந்தில் 86 ரன்கள் அடித்த புஜாரா லீவிஸ் பந்து வீச்சில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினர்.
அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரித்வி ஷா தன் முதல் சர்வதேச சதத்தை பூர்த்தி செய்தார்.19 பவுண்டரிகளுடன் 154 பந்துகளில் 134 ரன்கள் அடித்த பிரித்வி ஷா பிஷு பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோஹ்லி அரைசதம் அடித்தார். ரஹானே 44 ரன்களில் சேஸ் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார். அடுத்ததாக களமிறங்கிய ரிஷப் பன்ட் முகத்தை நோக்கி வந்த பவுன்சரை புல் ஷாட்டில் சிக்ஸர்க்கு விரட்டி அமர்கலபடுத்தினார். ஆட்ட நேர முடிவில் இந்தியா 89 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 364 ரன்கள் எடுத்தது. கோஹ்லி 72 ரன்களுடனும் ரிஷப பன்ட் 14 ரன்களுடனும் களத்தில் நின்றனர்.