
நாடு முழுவதும் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இந்த மாதம் 11 ஆம் தேதி முதல் மே மாதம் 19 ஆம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இத்துடன் ஆந்திரா,அருணாசலப் பிரதேசம், சிக்கிம் ,ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் ஆனது நடைபெற உள்ளது. ஆந்திரா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடைபெறுகிறது.