திருவாரூர் தெற்கு வீதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து மட்டும் அல்லாமல் மோடியை டாடி என்று அழைக்கும் துரோக கும்பலை விரட்டி அடிக்கவும், இரண்டு ஆட்சிகளையும் விழ செய்யவும் பரிசு பெட்டி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும் துரோகம் என்றாலே எட்டப்பன் பெயர் மறந்து இனிமேல் பழனிசாமி, பன்னீர் செல்வம் பெயர்தான் நினைவுக்கு வரும். நாட்டை வஞ்சித்த மோடி உடன் கூட்டணி வைத்து உள்ளனர். கஜா புயல் தாக்கியபோது மோடி வந்தாரா? ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிர் இழந்த போது வந்தாரா ? தேர்தலுக்காக மட்டும் திருவாரூரில் இருந்து மன்னார்குடிக்கு டவுன் பஸ்ஸில் செல்வது போன்று வந்து செல்கிறார் என காட்டத்துடன் கூறியுள்ளார்.