
பாலியல் குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் – விவரங்களை வெளிப்படுத்தக்கூடாது என்கிற உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் உள்ள நிலையில், பொள்ளாச்சி வன்கொடூரம் தொடர்பாக புகார் தந்த பெண்ணின் பெயர், கல்லூரி உள்ளிட்ட விவரங்களுடன் சி.பி.ஐ. விசாரணைக்கான அரசாணையை அ.தி.மு.க. அரசு வெளியிட்டிருக்கிறது. இது அப்பட்டமான விதிமீறல் மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் இனி புகார் தராமல் இருப்பதற்காக விடப்படும் மறைமுக அச்சுறுத்தலுமாகும். குற்றவாளிகளைக் காப்பாற்ற தனது கபட நாடகத்தைத் தொடர்கிறது ஆளுந்தரப்பு என திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.