இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, 4 மாத இடைவெளிக்குப் பின் மீண்டும் களத்திற்கு திரும்பினார். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் – சானியா மிர்சா தம்பதிக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்குப் பின் 4 மாதங்கள் ஓய்வில் இருந்த சானியா மிர்சா, தற்போது மீண்டும் டென்னிஸ் கோர்ட்டில் கால் வைத்துள்ளார். டென்னிஸ் விளையாடி பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். டென்னிஸ் விளையாடுவோருக்கு சானியா மிர்சா ஊக்கமாக திகழ்வதாக ரசிகர்கள் அனைவரும் ட்விட்டரில் பாராட்டி வருகின்றனர்.
மீண்டும் விளையாட வருகிறாரா சானியா மிர்சா?
