இந்திய கிரிக்கெட்டின் பல்கலைக்கழகமான ராகுல் டிராவிட் கிரிக்கெட்டின் உயர்ந்த விருதான ஹால் ஆப்பேமில் இடம் பிடித்து உள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்து உள்ள ஐசிசிஐ ஹால் ஆப்பேமில் உங்கள் பெயர் இடம் பெற்றது மிகப்பெரிய கவுரவமாகும். கிரிக்கெட்டில் அற்புதமான மனிதர்களுடன் உங்கள் பெயர் இடம் பெற்று உள்ளது. அரிய கவுரவமாகும்.
இந்திய அணியின் தடுப்புசுவர் மற்றும் குரு நாதராக கருதப்படும். டிராவிட்டின் கிரிக்கெட் தொழில்நுட்பம் உலக தரம் வாய்ந்தது. இந்த நிகழ்ச்சியில் கூட மிக எளிமையான முறையில் திருவனந்தபுரத்தில் உள்ள மைதானத்தில் ரசிகர்கள் முன்பு விருதினை கவாஸ்கர் அவர்கள் வழங்கினார்.
இது குறித்து தெரிவித்துள்ள டிராவிட் அவர்கள் என்னுடைய உண்மையான ஹீரோக்களுடன் நானும் இணைந்து உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது வாழ்க்கையில் ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து உள்ளார்.