மீடூ பயணம் எங்கு போய் முடியும் என தெரியவில்லை. இப்பொழுது அர்ஜுன் மீது சுமத்தப்பட்டுள்ளது. உண்மையா பொய்யா என்று தெரியவில்லை நிபுணன் படத்தில் அர்ஜுனின் மனைவியாக நடித்தவர் கன்னட நடிகை சுருதி அவர்கள் இப்போது அர்ஜுன் மீது அதிரடி குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். தாங்கள் ஒரு காட்சியில் நடித்து கொண்டிருந்ததாகவும் அப்போது காட்சிக்கு சம்பந்தமில்லாமல் தனது பின்புறம் அர்ஜுன் தொட்டு தடவியதாகவும் தெரிவித்துள்ளார். அதன்பிறகு தனக்கு தொடர்ந்து மறைமுகமாக பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறியுள்ளார். இது மேலும் திரையுலகை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. எதிர்பார்த்த நிலையில் அர்ஜுன் இந்த குற்றச்சாட்டு கடுமையாக மறுத்துள்ளார். மேலும் வழக்கு தொடரப்போவதாகவும் தெரிவித்துள்ளார். இவற்றில் வெல்ல போவது ஆக்க்ஷன் கிங் கா, அதிரடி புயலா என்பது தெரிந்துவிடும்.