இன்று முதல் 16ம் தேதி வரை பல்வேறு மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து இரவு 9.40 மணிக்கு வேளச்சேரிக்கு புறப்படும் ரயில், வேளச்சேரியில் இருந்து இரவு 10.30 மணிக்கு ஆவடிக்கு புறப்படும் ரயில், வேளச்சேரயில் இருந்து சென்னை கடறக்கரைக்கு இரவு 10.50 மணிக்கு புறப்படும் ரயில், வேளச்சேரயில் இருந்து சென்னை கடற்கரைக்கு இரவு 11.10 மணிக்கு புறப்படும் ரயில், சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு இரவு 10.28 மணிக்கு புறப்படும் ரயில், சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு இரவு 8.44 மணிக்கு புறப்படும் ரயில் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு இரவு 11.30 மணிக்கு புறப்படும் ரயில் ஆகியவை இன்று முதல் வரும் 15ம் தேதி வரை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு இரவு 11.10 மணிக்கு புறப்படும் ரயில், தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இரவு 10.25 மணிக்கு புறப்படும் ரயில், தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இரவு 10.45 மணிக்கு புறப்படும் ரயில், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு இரவு 12.15 மணிக்கு புறப்படும் ரயில், தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இரவு 11.30 மணிக்கு புறப்படும் ரயில், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு இரவு 11.10 மணிக்கு புறப்படும் ரயில்கள் இன்று முதல் வரும் 15ம் தேதி வரை சென்னை பூங்கா வரை மட்டுமே இயக்கப்படும்.
மின்சார ரயில் சேவையில் மாற்றம்?
