மின்சார பேருந்துகள் இயக்கம்

சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகரங்களில் விரைவில் மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். போக்குவரத்து கழகங்களின் செயல்பாடுகள் குறித்து போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் இயக்குனர் குழு கூட்டம் நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது. இதில் 7 போக்குவரத்து கழகங்களின் மேலாண் இயக்குனர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் கடனுதவியுடன் 12 ஆயிரம் புதிய பி.எஸ் – 6 தரத்திலான பேருந்துகளையும், 2 ஆயிரம் மின்சார பேருந்துகளையும் வாங்கிப் பயன்படுத்தும் வகையில் புதிய திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *