மாற்றுத்திறனாளிகளின் தினமான இன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தனது முகநூலில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எண்ணங்களில் தோன்றிடும் தடைகளேயன்றி வேறொன்றும் மனித உயர்வைத் தடுத்திட முடியாது என்பதை நிரூபித்துக்காட்டும் மகத்தானவர்களின் சாதனை சரித்திரம் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. மாற்றுத்திறனாளிகள் எல்லா நலனையும், சம உரிமையையும், மேன்மையையும் பெற்று உயர இந்நாளில் வாழ்த்துகிறேன்
ஐக்கிய நாடுகள் மன்றத்தால் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3ம் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது, மனிதகுலம் படைத்திட்ட சாதனைகளில் மாற்றுத்திறன் கொண்ட மாமனிதர்களின் பங்களிப்பு அளப்பரியது