மார்ச் 7 உலக கணித தினம்

கணிதம் என்பது எண்களைத் தீர்க்க மட்டும் அல்ல, அது துயரங்களைப் பிரித்து, துயரத்தை கழிப்பதற்கும், மகிழ்ச்சியைச் சேர்த்து, அன்பையும் மன்னிக்கும் பண்பையும் பெருகச் செய்வதே கணிதம் ஆகும்.
ரஷ்ய கணிதவியலாளர் ஓல்கா அலெக்ஸாண்ட்ரோவ்னா லேடிஜென்ஸ்காயாவின்  பிறந்த நாளை உலக கணித தினமாக கொண்டாடுகிறோம். ஒல்கா அலெக்ஸாண்ட்ரோவ்னா லேடிஜென்ஸ்காயா  Kologriv நகரில் பிறந்தார். அவரது தந்தை ஒரு கணித ஆசிரியராக இருந்தார், மேலும் அவர் கணிதத்தின் மீதான அவரது அன்பை ஊக்கப்படுத்தினார்.

ஓல்கா அலெக்ஸாண்ட்ரோவ்னா லேடிஜென்ஸ்காயா பகுதி வேறுபாடு சமன்பாடுகள் (குறிப்பாக ஹில்பெர்ட்டின் பத்தொன்பதாம் பிரச்சனை) மற்றும் திரவ இயக்கவியல் பற்றிய ஆய்வு செய்தார். நெயியேர்-ஸ்டோக்ஸ் சமன்பாடுகளுக்கு ஒரு வரையறுக்கப்பட்ட வேறுபாடு வழிமுறையின் ஒருங்கிணைப்பின் முதல் கடுமையான சான்றுகளை அவர் வழங்கினார். அவர் இவான் பெட்ரொவ்ஸ்கியின் மாணவராக இருந்தார்,  2002 ஆம் ஆண்டில் லொமோனோசோவ் தங்க பதக்கம் அவருக்கு வழங்கப்பட்டது. எனவே அவரது நினைவாக உலக கணித தினம் கொண்டாடப்படுகிறது.

உலக கணித தினம் என்பது, சர்வதேச அளவில் சிறந்த கணிதவியலாளர்களை உருவாக்கவும், ஊக்குவிக்கவும் Educational Resource Provider என்ற நிறுவனத்தால் நடத்தப்படும் கணிதத் தேர்வு ஆகும். 2010 – ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கணித தினத்தில் அதிகமானோர் ஆன்லைன் போட்டியில் கலந்து கோண்டு கின்னஸ் சாதனை படைத்தனர்.
உலகின் சிறந்த “கணித மேதைகளில் ஒருவர் சீனிவாச ராமானுஜன். இவரின் கணித அறிவை மக்கள் அறிந்து கொள்ளவும், இளைஞர்களிடம் கணித ஆர்வத்தை வளர்க்கவும், இவரது பிறந்த தினமான டிசம்பர் 22, தேசிய கணித தினமாக கடைபிடிக்கப்படும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார்.


நமது வாழ்வில் கணிதத்துக்கு முக்கிய பங்கு உண்டு. அறிவியலுக்கு அன்னையாக இருப்பது கணிதம். உலகின் ஆரம்ப கால கணித வளர்ச்சிக்கு இந்தியா, பல்வேறு பங்களிப்பை செய்துள்ளது. பூஜ்யத்தை உலகுக்கு அறிமுகம் செய்தது இந்தியா தான். ஆரியப்பட்டாவுக்கு பின், 16 ஆம் நூற்றாண்டில் கணிதத் துறையில் இந்தியா பின்தங்கியது. ராமானுஜன் மூலம் 20 ம் நூற்றாண்டில் கணிதத் துறையில் இந்தியா மீண்டும் சிறந்த விளங்கியது. தற்போதைய் தலைமுறையினர், கணிதத் துறையில் அதிகளவில் ஈடுபட முன்வர வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *