பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், நடிகை சாய் பல்லவி, வரலக்ஷ்மி, டோவினோ தாமஸ், அறந்தாங்கி நிஷா, ரோபோ சங்கர், கல்லூரி வினோத் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மாரி 2.
இந்தப் படம் வரும் 21ஆம் தேதி திரைக்கு வரும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்தப் படத்தில் சாய் பல்லவி, அராத்து ஆனந்தி என்ற கேரக்டரில் ஆட்டோ டிரைவராக நடித்துள்ளார். பிரேமம் படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த சாய்பல்லவி தற்போது ஆட்டோ டிரைவராக நடித்திருப்பது ரசிகர்களுக்கு மிகவும் புதிதாக உள்ளது. சாய் பல்லவி கூறியது சூட்டிங்கின்போது சென்னை சாலைகளில் ஆட்டோ ஓட்டுவது செம ஜாலியாக இருந்தது. எல்லோரும் என்னை அருமையாகப் பார்த்துக் கொண்டார்கள் தமிழ் மக்களுக்கு நன்றி எனக் கூறினார்.
நான் அடுத்தப் பிரபுதேவா யாரு நிகழ்ச்சி மூலம் தான் நான் திரைவாழ்க்கையில் அறிமுகம் ஆகினேன். அப்பொழுது பிரபுதேவா சாரோடு டான்ஸ் ஆட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அது மாரி 2-வில் நிறைவேறிவிட்டது இதற்கு நான் பாலாஜி மோகனுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று சாய்பல்லவி அவர்கள் கூறியுள்ளார்.