17 ஆண்டுகளுக்கு பின்னர் மாதவனும் – சிம்ரனும் ஜோடி சேர்ந்துள்ளனர். விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி ‘ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட்’ என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.
இதில் கதாநாயகனாக மாதவன் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக யார் நடிப்பார் என்ற விவரங்கள் வெளியாகாத நிலையில் தற்போது சிம்ரன்தான் மாதவனுக்கு ஜோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான புகைப்படத்தை நடிகர் மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். முன்னதாக மாதவன் – சிம்ரன் ஜோடி 2001-ல் வெளியான கே. பாலச்சந்திரனின் பார்த்தாலே பரவசம், 2002-ல் வெளியான மணி ரத்னத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களில் நடித்துள்ளனர்.