மழையால் டாஸ் போடுவதில் தாமதம்

இந்திய வீரர் ஷிகர் தவானுக்கு உலகக் கோப்பை தொடரில் காயம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும், இந்தியா இந்த உலகக் கோப்பையில் அனைவருக்கும் விருப்பமான அணியாக உள்ளது. இன்று இந்திய அணி நியூசிலாந்தை நோட்டிங்காமில் எதிர்கொள்கிறது.

ஷிகர் தவானுக்கு மாற்றாக யார் வந்தாலும், இந்திய அணியின் டாப் ஆர்டரின் செய்லபாடு நியூசிலாந்தை வீழ்த்த மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஆனால், அனைவரும் மழை வந்து போட்டி தடைப்படக்கூடாது என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

ஏனெனில், உலகக் கோப்பை மூன்று போட்டிகள் மழையால் தடைப்பட்டுள்ளது. ரோஹித் ஷர்மாவுடன் கே எல் ராகுல் களமிறங்குவார் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது. இந்த இணை சிறப்பாக செயல்பட்டால், அடுத்து வரும் மிடில் ஆர்ட்ர் வீரர்களுக்கு அதிக ரன் எடுக்க உதவியாக இருக்கும். இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஆடிய ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றது. பயிற்சி போட்டிகளில் சரியாக பர்ஃபார்ம் செய்யாத தவான், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 117 ரன்கள் எடுத்து இந்தியாவை வெற்றி பெற செய்தார்.

தவான் பேட் செய்துகொண்டிருந்த போது, அவர் கையில் பந்து பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. அதனால், அவருக்கு மூன்று வாரங்கள் ஓய்வு அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லோக்கி பெர்குசன், இந்தப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக பந்து வீசவுள்ளார்.