தமிழ்நாடு

மறைந்த தலைவர் கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழா

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா  16ஆம் தேதி நாளை நடக்க இருக்கிறது. இவ்விழாவிற்க்கு பல மாநில தலைவர்கள் வர இருக்கிறார்கள். அவர்களை நேரில் சென்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்கள் அழைப்புவிடுத்தார்.

இந்நிலையில் தலைவர் சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமலஹாசன் ஆகியோருக்கு திமுக மூத்த நிர்வாகிகள் நேரில் சென்று அழைப்பு விடுத்தனர்.

இதில் நடிகர் கமலஹாசன் பங்கேற்ப்பு தொடர்பான செய்தி எதுவும் வெளிவரவில்லை. இதையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவிற்கு சோனியா காந்தி கலந்து கொள்ள இருக்கிறார் பின் மெரினா கடற்கரைக்கு சென்று கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார் என்பது தெரியவந்துள்ளது.இதே நாளில் அண்ணாவின் சிலையும் நிறுவப்படும் என கூறியுள்ளார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker