தமிழ்நாடு
மருத்துவர்களின் போராட்டம்
அரசு மருத்துவர்கள் போரட்டம் குறித்து அ.ம.மு.கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் டிவிட்டரில் கருந்து தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தித் தமிழ்நாடு அரசு அதைக் கண்டுகொள்ளாததால், இன்று மாநிலம் முழுக்க புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில்லை என்ற போராட்டத்தை அறிவித்துள்ளது.அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு.
இந்தப் போராட்டம் இதே மாதத்தில் மேலும் நான்கு நாட்கள் நடக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கி தலைமை மருத்துவமனைவரை நோயாளிகள் சிகிச்சை கிடைக்காமல் அவதிப்பட வாய்ப்புள்ளது.
எனவே நோயாளிகளின் அவதியையும் மருத்துவர்களின் பணி நலனையும் மனதில்கொண்டு, போராட்டம் நடத்தும் மருத்துவர்களை அரசு அழைத்துப்பேசி உரிய தீர்வு காண வேண்டும்!