
தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பட்ட படிப்புகளுக்கு இதுவரை 11 ஆயிரத்து 100 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. தமிழக அரசின் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளிலும், சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களிலும் மருத்துவப் பட்ட மேற்படிப்புகள், பட்டயப் படிப்புகள் பல் மருத்துவப் படிப்புகளில் சேர கடந்த 11-ஆம் தேதி ஆன்லைன் விண்ணப்ப வினியோகம் தொடங்கியது. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வரும் 20-ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 31- ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு ஏப்ரல் 1-ஆம் தேதி கவுன்சிலிங் தொடங்கும் என்றும் மே 31-ஆம் தேதி மாணவர் சேர்க்கை நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 1-ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.