மரபணு மாற்றிய பருத்தி விதை விலை குறைப்பு

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி விதைகளுக்கு, அடுத்த நிதியாண்டுக்கான அதிகபட்ச விற்பனை விலையை பாக்கெட்டுக்கு ரூ.10 குறைத்து ரூ.730 ஆக மத்திய வேளாண் அமைச்சகம் நிர்ணயித்துள்ளது.  தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக அதிகபட்ச விற்பனை விலை குறைக்கப்பட்டு வருகிறது. ஒரு பாக்கெட் பருத்தி விதை என்பது 450 கிராம் கொண்டது. நடப்பு நிதியாண்டில் போல்கார்டு 2 ரக பருத்தி விதைகளுக்கான விலை ராயல்டி கட்டணம் சேர்த்து பாக்கெட்டுக்கு ரூ.740 என உள்ளது. வரும் நிதியாண்டுக்கு, அமெரிக்காவை சேர்ந்த நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய ராயல்டி கட்டணமும் பாதியாக, அதாவது ரூ.20 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *