ஆரோக்கியம்வாழ்க்கைவிவசாயம்

மரபணு மாற்றப்பட்ட தொழிற்நுட்ப பொய்கள்!!!

மரபணு மாற்றப்படும் பயிர்களுக்கு கொடுக்க படும் நொண்டி சாக்கு என்ன தெரியுமா?
இந்த வகை பயிர்களால், பூச்சி கொல்லிகள் உபயோகம் குறைகின்றது என்பது தான்.

இந்த செய்தி எந்த அளவு உண்மை?

நாம்,மரபணு மாற்றப்படும் பயிர்களுக்கு கண் மூடி கொண்டு ஆதரவு தந்தும் உலகம் முழுவதும் இந்த தொழில் நுட்பத்தை பரப்ப முயற்சிக்கும் அமெரிக்காவின் நிலை என்ன பார்ப்போமா?
இதை தெரிந்து கொள்வதற்கு முன், நமக்கு ரசாயன பூச்சி கொல்லி மற்றும் களை கொல்லி பற்றி அறிய வேண்டும்.

மொன்சாண்டோ நிறுவனம் கிளைபோஸேட் (Glyphosate) (Roundup) என்ற ஒரு களை கொல்லி கண்டு பிடித்தார்கள்.

ஆனால் இந்த ரசாயன களைகொல்லி வயலில் தெளித்தால், வயலில் உள்ள சோளம், சோயா போன்ற செடிகளும் பாதிக்க படுமே? உடனே, சோளத்தில் உள்ள மரபணுவை மாற்றி களை கொல்லி (Genetically modified for glyphosate resistance) எதிர்ப்பு சக்தியை கொண்டு வந்தார்கள்.

அதாவது, விவசாயிகள், கண்ணை மூடி கொண்டு Glyphosate வயலில் தெளிக்கலாம். களை செடிகள் அழிந்து போகும். ஆனால் சோளம் செடிக்கு ஒன்றும் ஆகாது. ஆனால், இயற்கை என்று ஒன்று இருப்பதை எல்லாரும் மறந்து விட்டார்கள். இயற்கைக்கு மாறாக எதாவது நாம் செய்தல், இயற்கை மிகவும் பலமாக எதிர் தாக்கு கொடுக்கும்.

இந்த மாதிரியான விஷ சோதனைக்கு எதிராக இயற்கையின் பதிலடி இப்போது அமெரிக்காவில் களைகொல்லி எதிர்ப்பு களை செடிகள் (Herbicide resistant weeds) புதிதாக வந்துள்ளன. இவை glyphosate மருந்திற்கு எதிர்ப்பு கொண்டுள்ளன. அது மட்டும் இல்லாமல், இவை வெகு வேகமாக வளர்கின்றன. எந்த ஒரு மருந்திற்கும் கட்டு படுவதில்லை. இவற்றை பற்றி முன்பே படித்தோம்

இதனால், அமெரிக்காவில் உள்ள விவசாயிகள் களைகளை கொள்ள மேலும் சக்தி வாய்ந்த களை கொல்லிகளை பயன் படுத்த ஆரம்பித்து விட்டனர்!

1996 முதல் 2011 வருடத்தில், ரசாயன பூச்சி கொல்லி உபயோகம் 123 மில்லியன் பவுண்ட் குறைந்தது. ஆனால், களை கொல்லி உபயோகம் 527 மில்லியன் பவுண்ட் அதிகரித்தது! ஆக ஒரு பக்கம் ரசாயன பூச்சி கொல்லி உபயோகம் குறைந்தாலும், ஒட்டு மொத்தமாக ரசாயன பூச்சிமருந்து/களைகொல்லி உபயோகம் பல மடங்கு அதிகரித்தே உள்ளன!!

மோந்சொண்டோவின் இந்த பொய்யை வெளிச்சம் காட்டி இருப்பது வாஷிங்டன் ஸ்டேட் பல்கலைகழத்தின் ஆராய்ச்சி ஆளர் பென் பரூக் ஆவார்

இந்த தொழிர்நுட்பதை இந்தியாவில் கொண்டு வந்து எல்லா பயிர்களுக்கும் கொண்டு வந்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்க படும் என்பது உண்மை

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker