மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி நடப்பு லோக்சபா தேர்தலில் பா.ஜ. க , 100 இடங்களை தாண்டாது என தெரிவித்துள்ளார். கோல்கட்டாவில் அமித்ஷா பங்கேற்ற கூட்டத்தில் கலவரம் ஏற்பட்ட சம்பவத்திற்கு பிறகு நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மம்தா பேசினார்.அப்போது அவர், பா.ஜ.க, குண்டர்களின் கட்சி. பா.ஜ.க, பணத்தின் மூலம் மக்களின் ஓட்டுக்களை வாங்கப் பார்க்கிறது.
300 இடங்களுக்கு மேல் வாங்க போவதாக பா.ஜ., தலைவர்கள் கூறி வருகிறார்கள். ஆனால் உண்மை வேறு,பா.ஜ.க,வுக்கு ஆந்திரா, தமிழகம் போன்ற மாநிலங்களில் ஒரு சீட் கூட கிடைக்காது. பூஜ்ஜியம் தான் கிடைக்கும்.
மகாராஷ்டிராவில் 20 இடங்கள் கிடைக்கும். இந்த தேர்தலில் பா.ஜ., 200 இடங்களை இழக்கும். பிரம்மாண்ட சிலை அமைப்பதாக பிரதமர் கூறுகிறார். சிலை வேண்டும் என யாரும் கையேந்தி பிச்சை கேட்கவில்லை என்றார்