பாகிஸ்தான் மற்றும் தென்ஆப்ரிக்கா அணிகள் மோதிய இரண்டாவது ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அஹமது தென் ஆப்ரிக்கா வீரர் பெலக்வாயோவை நோக்கி இனவெறியை குறிக்கும் விதத்தில் பேசி இருந்தார். இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டு உள்ள சர்ப்ராஸ் அஹமது விரக்தியில் தான் பேசியதாகவும் அந்த செயலுக்காக மன்னிப்பு கேட்பதாகவும் கூறி உள்ளார்.
