அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் திரு.அபிநந்தன் பாகிஸ்தான் இராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது எனவும் அதிலும், அவரை பாகிஸ்தான் இராணுவம் விதிகளை மீறி காயப்படுத்துவதுபோல் நடந்துகொள்ளும் காணொளியைக் காணும்பொழுது மனம் மிகவும் வேதனைப்படுகிறது என கூறியுள்ளார்.
மேலும் அவர் மத்திய அரசு எவ்வித காலதாமதமின்றி சர்வதேச விதிகளுக்குட்பட்டு அபிநந்தனை மீட்டுக் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்துகிறேன். அபிநந்தன் பத்திரமாக நாடு திரும்பிட ஒவ்வொரு இந்தியரும் பிரார்த்திக்கும் இந்நேரத்தில் அவரது குடும்பத்தினர் மனதைரியத்துடன் இருக்கும்படி வேண்டிக்கேட்டு கொள்கிறேன் என கூறியுள்ளார்.
நேற்று பாகிஸ்தான் விமானத்தை துரத்தி சென்ற இந்திய விமானம் சுட்டு விழ்த்த பட்டதில் இந்திய வீரர் அபினந்தன் பாகிஸ்தான் வீரர்களால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.