கட்டுரைகள்தமிழ்நாடு

மத்திய சென்னையில் வெற்றி யாருக்கு?

Who won in central Chennai?

அடுத்த மாதம் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் மத்திய சென்னையின் திமுக வேட்பாளராக மீண்டும் நிறுத்தபட்டு உள்ளார் தயாநிதி மாறன் அவர்கள். இதற்கு முன் மூன்று முறை மத்திய சென்னையில் போட்டியிட்டு உள்ள தயாநிதி மாறன் அவர்கள் இரண்டு முறை வெற்றியும் ஒரு முறை தோல்வியும் அடைந்து உள்ளார். தயாநிதி மாறன் லயோலா கல்லூரியில் பொருளாதார பட்டம் பெற்று உள்ளார்.

2004 ஆம் ஆண்டில் முதல் முறையாக மத்திய சென்னையில் போட்டியிட்ட தயாநிதி மாறன் 61.68 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவை சேர்ந்த பாலகங்கா 35.52 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றார்.2009 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 46.82 சதவீத வாக்குகள் பெற்று மத்திய சென்னையில் மீண்டும் வெற்றி பெற்றார் தயாநிதி மாறன். இவரை எதிர்த்து போட்டியிட்ட முஹமது அலி ஜின்னத் 41.34 சதவீத வாக்குகள் பெற்றார்.

.2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அனைத்து திமுக வேட்பாளர்களும் தோல்வி அடைந்த நிலையில் இவராவது வெற்றி பெறுவாரா என திமுக தொண்டர்கள் எதிர்பார்த்த போது இவரும் தோற்று போனது  ஒரு கதை. சதவீதபடி திமுகவின் ஒட்டுவங்கி மத்திய சென்னையில் குறைந்து வருவது கூர்ந்து கவனிக்கதக்கது. ஆனால் அனைத்து பலமும் உள்ளதால் தயாநிதிமாறன் இந்த தடவை கண்டிப்பாக வெற்றி பெறுவார் என அவரது கட்சியினர் நம்புகின்றனர்.

இந்த முறை அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு  மத்திய சென்னை ஒதுக்கபட்டு உள்ளது. மத்திய சென்னையில் பாமகவின் வேட்பாளராக சாம்பால் அறிவிக்கப்பட்டு உள்ளார். அவர் பாமகவின் தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் ஆவார். சென்ற முறை திமுகவும் அதிமுகவும் நேரடியாக மோதியதால் பரபரப்பாக மத்திய சென்னை காணப்பட்டது. ஆனால் இந்த தடவை திமுகவை எதிர்த்து பாமக போட்டி இடுவதால் எந்த அளவிற்கு போட்டி இருக்கும் என சொல்ல இயலவில்லை.

தொகுதி முழுவதும் தெரிந்த முகம், கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் பலம், பல வருடங்களாக தொகுதியை வலம் வந்து கொண்டிருப்பது, தொகுதியின் அனைத்து பகுதிகளும் அத்துபடி போன்றவை தயாநிதி மாறனின் பலங்களாக பார்க்கப்படுகிறது.ஆரம்பத்தில் இருந்த ஓட்டு சதவீதம் படிப்படியாக குறைந்து வருவது பலவீனமாக பார்க்கப்படுகிறது.

அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய , அதாவது வசதியானவர்கள், நடுத்தரவர்க்கம்,படித்தவர்கள், ஏழை எளியவர்கள் என அனைவரையும் உள்ளடக்கிய தொகுதி மத்திய சென்னை ஆகும். மாநிலத்தின் தலைநகரமான சென்னையின் மையப்பகுதியில் இந்த தொகுதி அமைந்து உள்ளதால் அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்து உள்ளது. தற்போதைய தேர்தல் வெப்பத்தில் அனைவரும் வேலையை தொடங்கி விட்டனர். ஆனால் வரும் நாட்களில் கடுமையான போட்டியை எதிர்கொள்ள வேண்டும் என தெரிகிறது.

 

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker