மத்திய அரசின் வெவ்வேறு துறைகளில் மொத்தம் 6.84 லட்சம் காலிப் பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திரா சிங் அளித்துள்ள பதிலில், இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசில் உள்ள வெவ்வேறு துறைகளுக்கு மொத்தம் 38.02 லட்சம் பணியாளர்களை நியமித்துக் கொள்ளலாம். அந்த வகையில் மார்ச் 1, 2018- வரையிலான தகவலின்படி மத்திய அரசில் மொத்தம் 6.84 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன.