மத்தியபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை கைபற்றியது. பாஜக அரசு தேர்தலில் பெரும் தோல்வியை எதிர் நோக்கியுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு 165 தொகுதியில் வென்ற பாஜக. இப்பொழுது 101 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
காங்கிரஸ் கடந்த முறை 2013ல் 58 தொகுதிகள் மட்டுமே பெற்றது. ஆனால் தற்பொழுது 116தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
மத்திய பிரதேசத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குபதிவில் அதிகபட்சமாக 75% வாக்குபதிவு நடத்துள்ளது.கடந்த தேர்தலைவிட 2.5% சதவீத வாக்குகள் கூடுதலாகப் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய பிரதேசத்தில் மொத்தம் 2907 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். மொத்தம் 230 தொகுதியாகும். பாஜக 230 தொகுதிகளிலும், காங்கிரஸ் 229 தொகுதிகளிலும் போட்டியிட்டனர்.