
மதுரை மாவட்டத்தில் நாளை முதல் ஜல்லிக்கட்டு
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு தொடங்குகிறது. இதனால் மதுரை மாவட்டம் விழா கோலம் பூண்டுள்ளது. கலவரம் ஏற்படமால் இருக்க பலத்தப்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 1000 மேற்பட்ட போலீஸ்சார்கள் பாதுகாப்பு பணியில் இடுப்பட்டுள்ளனர்.
காளை அடக்குவதற்கு இதுவரை 596 வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர். 570 காளைகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. காளை அடக்கும் வீரர்களுக்கு அரசுதரப்பில் இன்சூரன்ஸ் செய்யப்படுக்கிறது.
ஜல்லிக்கட்டு நாளை 14 ஜனவரி அவனியாபுரத்திலும், 15 ஜனவரி பாலமேட்டிலும், 16 ஜனவரி அலங்காநல்லூரிலும் நடைப்பெறும்.
பாலமேட்டில் இதுவரை காளை அடக்குவதற்கு 800 வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர், 800 காளைகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
ஜல்லிக்கட்டுக்கு புகழ் பெற்ற அலங்காநல்லூரிள் இதுவரை காளை அடக்குவதற்கு 876 வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
வீரர்களுக்கு உடல் தகுதி பரிச்சோதனை செய்யப்பட்டு தேர்வு செய்யப்படுக்கிறார்கள். மதுரை மாவட்டத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பல்வேறு தரப்பினரும் பரிசு பொருட்களை அளித்து வருக்கின்றனர்.