மதுரையில் வாக்குப்பதிவு நேரம் நீட்டிப்பு

ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது. 5 ஆண்டுகள் வருமான வரி தாக்கல் செய்ததற்கான சான்றிதழ், குற்ற வழக்குகள் தொடர்பான விவரங்களையும் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும் என தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் ஏப்ரல் 18ஆம் தேதி வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் என அவர் கூறியுள்ளார். மதுரையில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அவர் அறிவித்துள்ளார். சித்திரை திருவிழாவை கருத்தில் கொண்டு இரவு 8 மணி வரை வாக்குப்பதிவுக்கு அனுமதி வழங்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *